திருநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மகும்பல் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை திருநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சங்கிலித்தொடர் போல திருட்டு நகை பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை நடைபெற்று வந்தது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி போன்ற மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸர் தொடர் திருட்டில் தொடர்புடையவர்களை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் திருப்பரங்குன்றத்தில் சுற்றி திரிந்த நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி சேர்ந்த ஜன்னதுல்லா(45), ரஷ்யா (35) மற்றும் 17 வயது சிறுவன் பேரையூரை சேர்ந்த சித்தாரா(25) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து வாகனங்களை திருடியதாக ஒப்புக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நான்கு பேரும் கொள்ளையடித்த 18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.