60 வருடங்கள் பழமை வாய்ந்த அரசு-வேம்பு மரங்களுக்கு திருமணம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் சந்தப்படுகை கிராமத்தில் 60 வருடங்கள் பழமை வாய்ந்த அரசு மரத்துடன் வேம்பு மரம் சேர்ந்து இருக்கின்றது. இந்த இரு மரங்களையும் அக்கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றார்கள்.
மேலும் இங்கு வருடந்தோறும் சிவன்-பார்வதி திருக்கல்யாணமும் அதன் பின் அரசு-வேம்பு மரத்துக்கு திருமணமும் நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விழாவானது நேற்று நடந்தது. இதை முன்னிட்டு சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் மாலை மரத்துக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.