மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் பிரபலமான சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலைச்சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கு நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி என்ற மூதாட்டி வந்துள்ளார். இவர் திடீரென 350 அடி பள்ளத்தில் குதித்து விட்டார். இவரை சுற்றுலாப் பயணிகள் பலர் தடுத்துள்ளனர். இருப்பினும் லீலாவதி கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து ஊட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் மலையில் இருந்து கீழே குதித்த நீலாவதியின் உடலை கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி நல்லயா என்ற கணவரும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்த லீலாவதி 2-வதாக நல்லதம்பி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு நல்லதம்பி இறந்து விட்டதால் லீலாவதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. இந்நிலையில் 2 திருமணங்கள் செய்தும் குழந்தைகள் இருந்தும் தனிமையில் இருந்து வந்த லீலாவதி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாகத்தான் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் லீலாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.