Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானை…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…. தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம்….!!!!

தண்ணீரில் தத்தளித்த யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் காணப்படுவதால் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள மசினகுடியில் செந்நாய்கள், கரடிகள், புலிகள் மற்றும் காட்டு யானைகள் போன்றவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக மாவநல்லா ஆறு உட்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் ஒரு குட்டி யானை மாட்டிக் கொண்டது. இதுகுறித்து  வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மாவனல்லா ஆறுக்கு சென்றனர். அதன்பின் தண்ணீரில் தத்தளித்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அதற்கு வேண்டிய உணவுகளை கொடுத்தனர். இந்த குட்டி யானை பிறந்து சில நாட்கள் தான் இருக்கும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். அதன்பிறகு  தாய் யானையுடன் தண்ணீர் குடிப்பதற்காக வந்தபோது குட்டி யானை நீரில் அடித்துச் செல்ல பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |