மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் கிராமத்தில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ரெண்டேரிகோடியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ருக்மணியின் சேலை சக்கரத்தில் சிக்கியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ருக்மணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.