டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
இதில் கல்லூரி மாணவிகள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 22 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.