Categories
தேசிய செய்திகள்

ஐ சி ஐ சி ஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு… இதில் என்னென்ன பயன்கள் கிடைக்கும்…? இதோ முழு விவரம்..!!!!

ரூபே கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்துவதற்கான தேசிய பரிவர்த்தனை கழகத்துடன் icici வங்கி கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கார் ஐசிஐசிஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு என அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரிவார்டும் இனிய ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும் என தேசிய பரிவர்த்தனை கழகத்தின் அதிகாரி பிரவீன ராய் கூறியுள்ளார். இந்த கிரெடிட் கார்டில் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை காண்போம். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் இரண்டு ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த சலுகை பெட்ரோல் டீசலுக்கு பொருந்தாது.

யுட்டிலிட்டிஸ் மற்றும் இன்சூரன்ஸ் பிரிவுகளில் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்கும்.

இந்த கார்ட் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் கட்டணம் செலுத்தினால் சர்சார்ஜ் ரத்து செய்யப்படுகிறது.

வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 2000 போனஸ் ரிவார்ட்ஸ் பாய்ண்ட்ஸ் கிடைக்கும்.

மேற்கூறிய இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேலே செலவு செய்யும் ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய்க்கும் ஆயிரம் போனஸ் ரிவார்ட்ஸ் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

உள்நாட்டு ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையங்களில் lounge பயன்படுத்திக் கொள்ளலாம்.

Book my show இல் சினிமா டிக்கெட் புக்கிங் செய்தால் தள்ளுபடி கிடைக்கும்.

இரண்டு லட்சம் ரூபாய் வரை தனி நபர் விபத்து காப்பீடு.

24 மணி நேர concierge சேவைகள்.

Categories

Tech |