Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு…. பிசிசிஐ ஆலோசனை நடத்தப் போகிறதா…..? ரசிகர்கள் ஷாக்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தார். இப்படி சிறந்த பேட்ஸ்மேன் ஆக வலம் வந்த கோலி சமீப காலமாகவே ரன்களை எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து 1000 நாட்களை கடந்து விட்டது. இதனால் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.

ஆனாலும் விராட் கோலியால் மீண்டும் ஃபார்முக்கு வர முடியாததால், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த மேட்சில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியாவ வீழ்த்தியது. இந்த போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனால் விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் கவாஸ்கர் போன்றோர் கடுமையாக சாடியுள்ளனர். இந்த சூழலில் வருகிற அக்டோபர் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு விராட் கோலி 20 ஓவர் போட்டிகளில் விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. மேலும் இந்திய அணியில் திறமையான பல வீரர்கள் இருப்பதால் விராட் கோலியின் இடம் தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.

Categories

Tech |