Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் யாரெல்லாம் பயன் பெறலாம்…..??” ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை…!!!!!!!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலமாக செயல்படுத்தப்படும் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் ,கண் கண்ணாடியகம், மருந்தகம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், முட நீக்கு மையம் மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு 30 சதவீதம் என்பதற்கு ஏற்றவாறு அதிகபட்சமாக 2,25,000 மானியம் வழங்கப்படும்.

மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 சதவீதம் அல்லது திட்டம் மேம்பாட்டிற்கு ஏற்றபடி 2.50 லட்சம் அதிகபட்சமாக மானியம் வழங்கப்படும். பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களான நில மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெருவதற்கு 18 வயது முதல் 45 வரை இருக்க வேண்டும். மேற்படி மற்ற திட்டங்களுக்கு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |