Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்..! கவலைகள் தீரும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று பண வரவால் மனம் மகிழும்.

கவலைகளை மறைந்து இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அரசாங்க ஆதரவு இருக்கும். வங்கி கடன் உதவிகள் தடையின்றி வந்து சேரும். தொலைநோக்கு பார்வையுடன் இன்று காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்தஸ்து உயரும். அதுமட்டுமில்லாமல் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய சூழலும் இருக்கும். இன்று எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகிச் செல்லும். அடுத்தவர்களாள் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணம் வரவு எதிர்பார்த்தப்படியே இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். தொட்ட காரியம் துளிர்விடும். இன்று எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். இன்று மாணவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். உயர் கல்விக்கான சிந்தனை மேலோங்கும் கல்வி பற்றிய பயமும் விலகி செல்லும். பொருளாதார ரீதியில் சில முக்கியமான பணியில் வெற்றி கிடைக்கும். சமூக அக்கறையுடன் இன்று ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

பெரிய முதலீடுகளை தயவுசெய்து பயன்படுத்தாமல் கொஞ்சம் கவனத்தில் இருந்தால் போதுமானது. பணவிஷயத்தில் எப்பொழுதுமே கவனமாக இருங்கள். காதலர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5. அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்.

Categories

Tech |