Categories
அரசியல் மாநில செய்திகள்

இதான் ஸ்டாலின் பாணி…! கலைஞரை ஓவர்டேக் செய்து… சபதம் எடுத்த முதல்வர் …!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வரும், 1949-ல் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலில் தேர்தல் களத்திற்கு வந்தது 1957 ஆம் ஆண்டு. ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக எத்தனையோ திட்டங்களை சாதனைகளை உருவாக்கி தந்திருக்கின்றார்.

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்தும், அறிஞர் அண்ணா அவர்கள் ஓராண்டு காலத்தில் இந்த தமிழகத்திற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் விரைவாக உடனுக்குடன் செய்து முடித்தார், உழைத்தார், பாடுபட்டார். அதேபோல் 92 வயதிலேயே நடக்க முடியாத சூழலுக்கு ஆளாக்கப்பட்டாலும், சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே சுற்றி சுழன்று, இந்த தமிழினத்திற்காக எத்தனையோ சாதனைகளை தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

ஆக அவர்கள் வழியில் இன்றைக்கு 6-வது முறையாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, தேர்தல் நேரத்தில் சொன்ன அத்தனை உறுதிமொழிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆக சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம், கலைஞருடைய பாணி. கலைஞர் பெற்றெடுத்திருக்க கூடிய அவரது மகன் திரு ஸ்டாலினுடைய பானி சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் இது என்னுடைய பாணி.

ஆக இந்த பாணியை இன்றைக்கு நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், இந்த பொறுப்பிலே நான் இன்று அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னால், உங்களால், நீங்கள் சிந்திய ரத்தத்தால், நீங்கள் உழைத்திருக்கக்கூடிய இந்த உழைப்பால், தலைவர் கலைஞருடைய உயிரினும் உயிரான உடன்பிறப்புகளாகிய இருக்கின்ற உங்களால் அந்த பொறுப்பிலே நான் அமர்ந்திருக்கிறேன்.

ஆக உங்க உத்தரவை ஏற்றுக் கொண்டு இந்த பணியினை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். ஆக தொடர்ந்து நிறைவேற்ற அவருடைய சிலையை சிறந்து வைத்திருக்கக் கூடிய இந்த நேரத்தில் ஒரு உறுதிமொழியாக சபதமாக திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |