அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணன் ஓபிஎஸ் அவர்களை வலிமைமிக்க அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையாக, அவருக்கு அனைத்து வலிமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக வழங்கி, அவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒட்டுமொத்த தொண்டர்களாலும்,
ஒருமித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்று இருக்கின்ற அணுதாவிகளால் அவரைத்தான் நாங்கள் தலைவராக ஏற்று அவர் வழியில் நின்று வாழ்ந்து காட்டுவோம் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றுபடுவோம் என்று வாருங்கள் என்று அழைத்தது யார்? ஓபிஎஸ் அவர்கள் தான். அனைவரும் வாருங்கள் ஒன்றுபட்டு உழைப்போம் என்று சொன்ன அற்புதமான வார்த்தை, ஆனால் புரட்சித்தலைவி அம்மா வகித்த இந்த பதவியை யாரும் வகிக்க கூடாது என்று சொன்னவர்கள் ஏன் அந்த பதவி மீது ஆசைப்படுகிறார்கள்.
புரட்சித்தலைவிக்கு நன்றிக்கடன் பட்டவர்களா நீங்கள், விசுவாசத்தை காட்டுவீர்களா நீங்கள்? புரட்சித்தலைவி வகித்த பதவியை நாங்கள் வகிக்க மாட்டோம் என்று சொல்லி தானே, ஒருங்கிணைப்பாளரும் – இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து அந்த விதிகளை உருவாக்குனீர்கள், இப்போது அந்த விதிகளை மாற்றி மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு வந்தது? அது இந்த நாடு அறியும். அந்த ஆசையை இந்த நாடு அறியும். யாரு எடப்பாடி கே பழனிச்சாமி அம்மா வகித்த பதவிக்கு ஆசைப்படலாமா? என கேள்வி எழுப்பினார்.