அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, எம்.ஜி.ஆர் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர், வரலாற்றை படைத்து காட்டிய அற்புதமான உலகத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை,
அவருக்கு பின்னால் மனித குல மாணிக்கம் நாங்கள் வாழ்ந்து வணங்குகின்ற எங்களுடைய இதய தெய்வம் பொன்மனத்தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னால் நூறாண்டுகள் வாழும் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லி, இந்த அற்புத தலைவியின் வழியில் நின்றோம், அந்த இயக்கத்தை உருவாக்கிய அற்புத தலைவருடைய வழியில் நின்று இன்றைக்கு ஒன்றுபடுவோம்,
-வென்று காட்டுவோம் அனைவரும் வாருங்கள் என்று சொன்ன வரலாறு யாருக்கு ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் எக்கு கோட்டையாக தமிழகத்தினுடைய ஆட்சிக்கட்டிலில் அமரும் என்று அழைப்பு விடுத்த ஒரு வரலாற்றுத் தலைவர் அருமை அண்ணன். புரட்சித்தலைவி அம்மா அவருடைய நம்பிக்கை பெற்று இரண்டு மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்து, அம்மாவிடத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தார். ஓபிஎஸ் தலைமை அவர்களை வலுமிக்க தலைமையாக நாங்கள் உழைத்து உருவாக்குவது என்பதுதான் இன்றைக்கு நாங்கள் எடுத்திருக்கின்ற சத்யபிரமாணம் என பேசி அதிரடி காட்டினார்.