Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கையாலாகாத முதல்வர் ஸ்டாலின்… நொண்டிச் சாக்கை சொல்லுறாரு… பொறிந்து தள்ளிய சி.வி சண்முகம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம், இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகம், அதனுடைய முதலமைச்சராக இருக்கின்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு கொடுத்த, சொன்ன திட்டங்களை நிறைவேற்ற தவறுயது மட்டுமல்லாமல், ஏற்கனவே மக்கள் நலன் கருதி,

மக்களுடைய மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். முடக்கி வருகின்றது, செயல்படுத்த மறுக்கிறது. இதுதான் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு கொடுக்கின்ற நன்றி கடன்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்றைக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றார்கள். திரு பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சர், திரு மஸ்தான் அவர்கள் சிறுபான்மை துறை அமைச்சராக இருக்கிறார்.   நாங்கள் அரசியல் ரீதியாக பேசவில்லை. இங்கு எங்களுடைய அரசியல் சார்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய திரு ஸ்டாலின் அவர்கள், இந்த விழுப்புரம் மக்களுக்கு அம்மாவுடைய அரசு, மக்களுடைய நலனுக்காக அறிவித்த திட்டங்களை ஏன் ரத்து செய்கிறார்கள் ?

அந்த திட்டத்தை முதலமைச்சரிடம் வற்புறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டு அமைச்சர்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை, ஏன் தவறுகிறார்கள் ? தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? நாங்கள் ஏதோ அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலனளிக்கக்கூடிய செயலுக்காக போராடவில்லை.

ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தினுடைய ஏழை எளிய, குறிப்பாக இந்த மாவட்டம் என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விவசாயத்தையே நம்பி இருக்கின்ற மாவட்டம். தொழிற்சாலைகளே இல்லாத ஒரு மாவட்டம், இப்படிப்பட்ட மாவட்டம் கல்வியிலே மிகவும் பின்தங்கிய மாவட்டம், கல்வியிலே மிகவும் பின்தங்கிய மாவட்டம்.

கல்வியில் 1,2 என்று சொல்வார்கள். ஆனால் விழுப்புரம் மாவட்டம் என்பது 32, 31ல் தான் இருக்கும். பல முயற்சிகள் எடுத்திருக்கிறோம். இருந்தும் இன்றைக்கு கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகவே இருக்கின்றது. தொழிற்சாலைகளிலும் பின் தங்கிய மாவட்டம், குடிநீருக்கும் தட்டுப்பாடு உள்ள மாவட்டம், தினக்கூலிகள் தினந்தோறும் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் அடுப்பு எரிகின்ற மாவட்டம்.

இப்படிப்பட்ட மாவட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு அம்மாவுடைய அரசு, திரு எடப்பாடி அவர்கள் பல்வேறு திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு அறிவித்தார்கள். குறிப்பாக இந்த மாவட்டம் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், இந்த மாவட்டம் கல்வியிலேயே மேம்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக, பல ஆண்டு காலமாக கோரிக்கையான விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு என்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை மாண்புமிகு அம்மாவின் பெயரில் சட்டம் இயற்றி,

அதை தொடங்கி விழுப்புரத்தில் செயல்பட தொடங்கி இருக்கிறோம், அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு என்ன ஆகிவிட்டது? ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக அரசு, ஸ்டாலின் அரசு, அதனுடைய அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி, அவரை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கின்ற விழுப்புரம் மாவட்டத்திற்கு, அதை மேலும் விரிவுபடுத்துவதற்கு பதிலாக, வாக்களித்த கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மக்களுக்கு எதிராக அந்த பல்கலைக்கழகத்தை மாற்றி இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற மாணவ, மாணவிகள் இலவச உயர் கல்வி படிக்கக் கூடாதா? ஆனால் அன்றைக்கு பல்வேறு நொண்டிச் சாக்குகளை, காரணங்களை சொன்னார்கள். நிதி ஒதுக்கவில்லை என்று… நிதி ஒதுக்குவது யார்? அரசு. அரசு யாரு கையில் இருக்கிறது ? கையாலாகாத முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையில் இருக்கிறது. அந்த கோப்பில் கையெழுத்து போட வேண்டியவர் யார் ? இங்கிருக்கின்ற பொன்முடி. ஆனால் அதற்கு நிதியை ஒதுக்க மறுத்துவிட்டு, அதை காரணமாக வைத்து பல்கலைக்கழகத்தை மூடினார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |