Categories
தேசிய செய்திகள்

செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை… காவல் நிலையத்திலிருந்து தப்பிய மருத்துவர்..!!

ஆந்திராவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரவீந்திரநாத் தாகூர் என்பவன் மருத்துவராகப் பணியாற்றி வந்தான். இவன் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள் இருவருக்கு அடிக்கடி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, வியாழக்கிழமை (நேற்று) செவிலியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் மருத்துவர் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைப்பதற்காக காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். ஆனால் போலீசாரின் கவனத்தை முற்றிலும் திசை திருப்பிய அவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து  கொடூரன் ரவீந்திரநாத்தைப் பிடிபதற்கு  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Categories

Tech |