திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெருவை சேர்ந்தவர் அரபாத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வரும் இவரது மனைவி நேற்றைய தினம் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ந்து போன அவர் உள்ளே சென்று சோதனையிட்டபோது 16 பவுன் தங்க நகை திருடு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.