TNPSC தேர்வு முறைகேட்டு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் முக்கியப் பணிகளில் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தமிழக அரசு நடத்தியது. ஆனால் சில விஷமிகள் அதில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விசாரணையை ஒரு பக்கம் நடந்தி கொண்டிருந்த நேரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவை அடுத்து சிபிசிஐடி விரைந்து செயல்பட்டது.
சிபிசிஐடி_யின் டிஜிபி உத்தரவின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டார்கள். அவர்கள் எந்த வகையிலும் தப்பி விடாதபடி சிபிசிஐடி தனிப்படை காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுவரையில் 41 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக கைதாகி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தற்போது வரையில் விசாரணையும் , குற்றவாளிகள் தேடுதல் வேட்டையும் முழுவேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
சிபிசிஐடி நடத்தும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்குள்ளாக்கி வருகின்றது.டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கிய குற்றவாளியான ஐயப்பன் திமுகவின் பிரச்சார பீரங்கி என்பதும், அவர் திமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாவிற்கு நெருக்கமானவர் என்றும் தற்போது தெரியவந்திருக்கிறது.
மேலும் ஐயப்பன் திமுக இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் சிபிசிஐடி விசாரணையில் வெளியாகி இருக்கிறது. இந்த உண்மைகள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுவை பதற வைத்திருக்கிறது.