குடித்துவிட்டு வந்து தகராறு செய்த தம்பியை கொன்று எரித்த அண்ணன் மற்றும் குடும்பத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் கூடகோவிலை சேர்ந்தவர் சுரேஷ். குடும்ப பிரச்சினையின் காரணமாக சுரேஷின் மனைவி பிரிந்து சென்றுவிட விரக்தியில் இருந்த சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாக தகவல் உள்ளது.
வழக்கம்போல் நேற்றும் மது அருந்திவிட்டு கையில் கத்தியுடன் வந்து பொதுமக்களைகுத்தி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதை அறிந்த சுரேஷின் பெரியப்பா மகன் வெங்கடேஷ் சுரேசை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கையில் வைத்திருந்த கத்தியால் வெங்கடேசன் குத்த முயன்றார். சுதாரித்துக்கொண்ட வெங்கடேஷ் சுரேஷை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக சுரேஷின் கழுத்தில் காயம் பட்டு சுரேஷ் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்து உடலை எரிக்க முற்பட்டனர். தகவலறிந்த கூடக்கோவில் காவல்துறையினர் விரைந்து வர சுரேஷின் உடலை எரித்துக் கொண்டிருந்த பொழுது பாதி உடல் எரிந்த நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு கொலை செய்த வெங்கடேஷை கைது செய்தனர்.