போலி நகை வைத்து பணம் மோசடி செய்த வாங்கி ஊழியரும் கைது
ஆலந்தூர் திருவொற்றியூரை சேர்ந்த சுப்பிரமணி. தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் வங்கியில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ராஜம்மாள் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாள் நகைகளை அடகு வைத்து ரூபாய் 18 லட்சம் கடன் பெற்றுள்ளார். ராஜம்மாள் கொண்டுவந்த நகைகளை மதிப்பீடு செய்து தொகையை நிர்ணயம் செய்தவர் சுப்பிரமணி.
இந்நிலையில் வங்கியில் இருக்கும் நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவில் ராஜம்மாள் அடகு வைத்த நகை அனைத்தும் போலியான நகை எனவும் ராஜம்மாளுக்கு சுப்பிரமணி உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சுப்பிரமணியனும் ராஜம்மாள் சேர்ந்து போலி நகையை வைத்து பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுப்பிரமணியனை கைது செய்து ராஜம்மாலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.