காதலர் தினத்தை கொண்டாட சென்ற பெண் விபத்தில் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடில் இருக்கும் கேகே நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் துளசி தம்பதியினர். தம்பதியினரின் மகள் ஆர்த்தி நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் என்பவரும் ஆர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளில் காரணமாகவும் இன்று காதலர் தினத்தை முன்னிட்டும் ஆர்த்தியும் அசோக்கும் பெங்களூரில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.
பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். அசோக் சாலையோரம் விழுந்ததால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். தன் கண் முன்னே காதலி உயிரிழந்ததை பார்த்த அசோக் கதறி அழுதார்.