இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் சீனாவின் ‘யுவான் வாங் 5’ உளவு கப்பல் இலங்கை அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வந்து ஒரு வாரம் இருந்து கண்காணிப்பு பணியை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்தது. முதலில் சீனா உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்தது. அதன் பிறகு அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அனுமதி அளித்தது. இவ்வாறு இலங்கை உள் விவாகரங்களில் சீனா அதிக தலையிடுவதை தடுக்க அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று அதிபர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ரணில் கூறியது, “நாம் இனி கடன் உதவியை நம்பி இருக்கும் தேசமாக இருக்க முடியாது. வலுவான பொருளாதரங்களைக் கொண்ட பிற நாடுகளின் தலையீட்டின் கருவியாக தங்களை இனி பயன்படுத்தக் கூடாது. ஒற்றுமையாக செயல்பட்டால் தான் இதையெல்லாம் சாதிக்க முடியும். இந்த முன்னோடி இல்லாத சூழ்நிலை நாம் அனைவரின் பொறுப்பாகும். எனவே நாட்டின் தேவைக்காக முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி சமாளிப்பதற்கும், அண்டை நாடுகள் தலையிடுவதை தடுக்கவும் அரசாங்கத்துடன் அனைத்து கட்சிகளுக்கும் இணைய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.