Categories
மாவட்ட செய்திகள்

காவேரி ஆற்றில் வெள்ளம்…. 3 வது நாளாக 100 வீடுகளில் சூழ்ந்த தண்ணீர்…. பெரும் பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஆறுகள் நிரம்பி கரைபுரண்டு வருகிறது. மேலும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே அவர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் பவானி புதிய பஸ் நிலையம், நேதாஜி நகர், காவிரி நகர், காவிரி வீதி, தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பசுவேஸ்வரர் வீதி, பவானி பழைய பாலம் அருகில் உள்ள பாலக்கரை ஆகிய தாழ்வானப் பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட வீதிகளில் கடந்த 3 நாட்களாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வருவாய்துறை சார்பில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |