Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த பள்ளி!

மகாராஷ்டிராவில் காதல் திருமணத்திற்கு எதிராக மாணவிகளை உறுதி மொழி ஏற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்திய சமூகத்தில் ஊடுருவி இருக்கும் சாதிய கட்டமைப்பை உடைத்தெறிவதற்கு காதலின் பங்கு மிக முக்கியமானது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் மாணவிகளை காதல் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காதலில் ஈடுபட மாட்டோம், காதல் திருமணம் செய்ய மாட்டோம் போன்ற உறுதிமொழிகளை மாணவிகளை கட்டாயப்படுத்தி பள்ளி நிர்வாகம் எடுக்க வைத்துள்ளது. மாணவிகள் வரிசையில் நின்றபடி உறுதிமொழி ஏற்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுவருகிறது.

Categories

Tech |