Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு வீதிகளில் தேங்கும் மழைநீர்”… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!!

கோவை நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஆனால் நகரில் உள்ள நூறு வார்டுகளில் பல இடங்களில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் ரோட்டில் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பலத்த மழை பெய்கின்ற போது வீதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளில் இருக்கும் பொருட்கள் சேதம் அடைகின்றது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோவை நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் போது 63 வது வார்டு சண்முக தேவர் வீதி எல் எம் என் விதி சவுரிபாளையம் பிரிவு அஷ்டலஷ்மி அவென்யூ நாகப்ப வீதி போன்ற பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அந்த தண்ணீர் சாக்கடை கால்வாய் வழியாக சென்று தனியார் மருத்துவமனையின் 100 அடி கிணற்றுக்குள் செல்கின்றது. அந்த கிணறு நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சேர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி கோமளா தேவி போன்றோர் பேசும்போது வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் விடிய விடிய தண்ணீரை எடுத்து வெளியேற்றியுள்ளோம். அதனால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குடியிருப்புகளில் வடிகால் வசதி செய்வதுடன் வாலாங்குளம் தண்ணீர் வந்து ஓடுவதை தடுப்பதற்கு சங்கனூர் ஓடையில் இணைப்பு ஏற்படுத்தும் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். திருச்சி ரோட்டில் ஆலங்குளம் தண்ணீர் சென்று குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை அறிந்த கலெக்டர் சமீரன் நேற்று மாலை பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன் பின் அவர் தண்ணீர் தொடர்ந்து அதிகரிப்பதை தடுக்க நீர் செல்லும் பாதையில் மணல் மூட்டைகளை அடக்கி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாமல் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் கோவை திருச்சி ரோடு பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததை மேயர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர் மோட்டார் வாகன மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றுமாறு மேயர் உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |