சீனர்கள் நடத்திய கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் பயனர்களின் முக்கிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களின் பதவி ஏற்றம் செய்துள்ளனர் என்று தெரியவந்தது. அதனைப் போல பல கடன் செயலிகள் இந்தியர்களை ஏமாற்றி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், நாட்டில் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகிறது. இவற்றில் சட்ட விரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கிக் கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சீன கடன் செய்திகளும் இதில் அடங்கும. இந்த செயலிகள் இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி ரூ.500 கோடி வரை முறைகேடாக சம்பாதித்துள்ளது. அவர்களின் மிரட்டலுக்கு 52 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இந்த செயலியை ஒடுக்காதது ஏன்?அதற்கு மோடி அரசிடம் எந்த வியூகமும், திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.