Categories
தேசிய செய்திகள்

அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு…. இதுதான் காரணம்….. பீதியில் மக்கள்….!!!!!

கர்நாடக மாநில கொப்பல் மாவட்டத்தில் கங்காவதி டவுன் அருகில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு அதிகமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் பெற வருகை புரிவார்கள். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அஞ்சனாத்திரை மலைப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர. மேலும் மலைப்பகுதியில் உள்ள நடைபாதையில் சிறுத்தைகள் நடமாட்டத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |