Categories
தேசிய செய்திகள்

”காதல் திருமணம் செய்யமாட்டோம்” மாணவிகள், எடுக்க வைத்த நிர்வாகம் …!!

ஒருநாளும் காதல் திருமணம் செய்யமாட்டோம் என கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுள்ள வீடியோ வெளியாகி, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினத்தை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் காதல் திருமணங்களால் சாதி, மத அடையாளங்கள் தவிர்க்கப்பட்டு, மனிதத்தன்மை அதிகரித்து வரும் சூழலில் மகாராஷ்டிராவில் உள்ள சந்தூர் கெல்வி கலைக் கல்லூரியில், படிக்கும் மாணவிகளை காதல் திருமணம் செய்யமாட்டோம் என்று கல்லூரி நிர்வாகத்தினர் உறுதிமொழி ஏற்க வைத்துள்ளனர்.

அந்த உறுதிமொழியில், ”பெற்றோர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மீது அதீத நம்பிக்கை உள்ளதால் இந்த உறுதிமொழியை ஏற்கிறோம். வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிப்போம். ஆனால், ஒருநாளும் காதல் திருமணங்களை செய்யமாட்டோம். வரதட்சணைக் கேட்கும் இளைஞர்களை இணையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். சமூக அழுத்தத்தால் எங்களுக்கு எங்கள் பெற்றோர்கள் வரதட்சணை வழங்கினால், நாளை எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வரதட்சணை கேட்க மாட்டோம். சமூகக் கடமை என்பதால் இந்த சத்தியத்தை செய்கிறேன்” என்று மாணவிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இந்த உறுதிமொழி எடுத்ததற்கு சமூகத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தான் காரணம் எனக் கல்லூரி நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது.மாணவிகளின் உறுதிமொழி ஏற்றுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |