சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதாவது சினூக் ஹெலிகாப்டர்களில் அடிக்கடி என்ஜின் தீப்பிடித்ததை அடுத்து அமெரிக்க ராணுமானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் மொத்தம் 400சினூக் ஹெலிகாப்டர்களானது பயன்பாட்டில் இருக்கிறது. இந்திய விமானப்படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில் ஒட்டு மொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் நிறுத்துவதற்கான முழு விபரங்களை அமெரிக்கவிடம் இந்திய தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்கா கொடுக்கும் விளக்கத்திற்கு பின், இந்திய விமானப்படையும் சினூக்ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்புள்ளது