குரூப்-1 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவடைந்துள்ளது.
92 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தோ்வு அறிவிக்கை சென்ற ஜூலை 21ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தோ்வுக்கு 3.20 லட்சம் போ் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான காலம் சென்ற 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் துவங்கி 29ம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கால அவகாசத்திற்குள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் நிலை எழுத்துத்தோ்வு அக்டோபா் 30ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.