கடுமையான வெயிலின் தாக்கத்தினால் ஆறுகள் மற்றும் ஏரிகள் வறண்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கு 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலை பெய்தும் ஆறுகள் மற்றும் ஏரிகளை நிரப்புவதற்கான போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என சுற்றுச்சூழல் செயலாண்மை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான கார்ன்வாலின் மற்றும் கோலிப்போர்டு ஏரிகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் தெற்கு இங்கிலாந்து முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதோடு, வருகிற நாட்களிலும் மழைக்கு குறைவான வாய்ப்பே இருப்பதாகவும் சுற்றுச்சூழல் செயலாண்மை தெரிவித்துள்ளது.