இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் அரசின் அனைத்து தேவைகளுக்கும் சலுகைகளை பெறுவதற்கு முக்கிய சான்றாக ஆதார் கார்டு விளங்குகிறது. தற்போது ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆதருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறு இணைப்பதன் மூலம் நாட்டில் நடக்கும் பல மோசடிகள் விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிம் கார்ட் வாங்குவதற்கு ஆதார் முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. நாட்டில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக அரசு ஆதாருடன் தொலைபேசி எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்து உள்ளது.
இந்நிலையில் ஆதார் எண் மூலம் பெறப்பட்ட போலி சிம்கார்டுகளை கண்டறிவதை அறிந்து கொள்ளலாம் என்று அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த மோசடிகளை அரசு இணையதளத்தை பயன்படுத்தி எளிதாக கண்டறியலாம். அதாவது https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு உங்களது முதன்மை எஎண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து உங்கள் தொலைபேசி எனக்கு ஓடிபி அனுப்பப்படும் அதன் பிறகு OTP யை உள்ளிட்டு ஓடிபி சரிபார்க்கப்பட்டதும், உங்கள் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களும் திரையில் தோன்றும். இதில் நீங்கள் உபயோகிக்காத அல்லது தெரியாத மொபைல் எண் ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த எண்ணெய் ரத்து செய்வதற்கான கோரிக்கைகளையும் பதிவு செய்யலாம்.