Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலம்…. இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. அரசு திடீர் கட்டுப்பாடுகள் விதிப்பு….!!!!

பொது இடங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா மற்றும் மதுபானங்கள் போன்ற போதை பொருட்களை உட்கொள்ளக் கூடாது. ஊர்வலத்தின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் அல்லது அநாகரிகமான உரையாடல்கள் இருக்கக் கூடாது.

அரசியல் கட்சி அல்லது மதம் சமூகத்தை குறிப்பிடும் விதத்தில் பாடல்கள் மற்றும் நடனம் இருக்கக் கூடாது.அரசியல் கட்சிகள் மற்றும் மதத்திற்கு ஆதரவாக அல்லது எதிராக பேனர்கள் வைக்க கூடாது.மேலும் ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |