Categories
சினிமா தமிழ் சினிமா

“அக்கடான்னு நாங்க உடை போட்டா” விதவிதமான ஆடையில் கலக்கும் டிடி….. கேள்வியால் குழம்பி போன ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை பேட்டி எடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை கேட்பார். இந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக டிடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

அதோடு வெள்ளி திரையிலும் தற்போது டிடி நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அக்கடான்னு நாங்க உடை போட்டால் என்ற பாடலுக்கு விதவிதமான உடைகளில் வருவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் முடிவில் டிடி எந்த ஸ்டெப்பில் எந்த ஆடை உங்களுக்கு பிடித்தது என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனராம். மேலும் பல ரசிகர்கள் எந்த உடை போட்டாலும் உங்களுக்கு நன்றாகத் தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |