Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் வேடத்தில் கலக்கும் கீர்த்தி…. இணையத்தில் வெளியான மோஷன் போஸ்டர்…. செம வைரல்….!!!!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது ஹீரோ, இரும்புத்திரை மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் தற்போது சைரன் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் தொடர்பாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் கூறியதாவது, நடிகர் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய 2 பேருமே முன்னணி நடிகர்கள். இந்த படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோன்று ஹீரோயினுக்கும் இருக்கிறது. இதுவரை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி இணைந்ததில்லை என்பதால் இவர்களுக்கு இது புதிய அனுபவம். ஏனெனில் எனக்கு நினைவிருக்கும் வரை அத்தகைய கதாபாத்திரங்களை அவர்கள் செய்தது என்று கூறினார். மேலும் சைரன் படத்தின் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |