Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுக்கு 100 மெம்பர்…! டோட்டல் 1கோடி பேர்…. பழனிசாமியின் சீக்ரெட் வேலை… அலறும் அதிமுக தலைமை …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, என்னுடைய முயற்சி என்பது, தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சம் அண்ணா திமுக கிளைகளில், உறுப்பினர் அல்ல, பூத் ஸ்லிப் கொடுப்பார்கள். அது மாதிரி பூத் ஸ்லிப் மாறி ஆன்லைனில் அடையாள அட்டைகள் வழங்கி கொண்டு வருகிறேன். அந்த ஒரு லட்சம் பேரும் ஆளுக்கு நூறு நூறு உறுப்பினர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை 27,000-த்தை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது.அப்போ அந்த ஒரு லட்சம் உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் ஒன்று திரளுகிற போது, அவர்கள் பின்னால் ஆளுக்கு நூறு பேர் என்று ஒரு கோடி பேர் அண்ணா திமுக தொண்டர்கள் ஓர் அணியில் திரளுவார்கள்.  தேர்தல் ஆணையத்தில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை, அது மிக நேர்மையான முறையில், வெளிப்படையாக, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடக்க வேண்டும்.

அதில் ஈபிஎஸ் போட்டியிடலாம், ஓபிஎஸ் போட்டியிடலாம், சசிகலா போட்டியிடலாம். அந்த ஒன்றரை கோடி தொண்டர்களில் யார் வேணுமானாலும் போட்டியிடலாம். அப்படி ஒரு தேர்தலை நடத்த முடியாது என பல பேர் போலியான பிம்பத்தை உருவாக்குகிறார்கள் ஒவ்வொரு அண்ணா திமுக உறுப்பினரும் ஏதேனும் ஒரு கிளையில்தான் உறுப்பினராக இருக்கிறார்கள்.

ஆனால் கிளை செயலாளருக்கு தேர்தல் நடத்துறோம். அப்போ ஒரு கிளைச் செயலாளருக்கு ஒரு ஓட்டு, பொதுச்செயலாளருக்கு ஒரு ஓட்டு என்று அந்த தேர்தல்கள் பொதுச்செயலாளருக்கு நடத்தப்படுகின்ற போது, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு தலைமை உருவாகும். அப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை தான் வலிமையான தலைமையாக இருக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |