Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்ல…! நீதிபதி சொன்னது தப்பு… ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது பாய்ச்சல் ..!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி,  அதிமுக வழக்கின் தீர்ப்பில் ”பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம்” கொண்டது என்று நீதிபதி சொல்லியிருப்பார். அது தவறான பார்வை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்சி பைலாவில்.. கட்சி விதிகளில் அடிப்படையில் தொண்டர்களால் தான் அண்ணா திமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இருக்கிறதே ஒழிய, பொதுக்குழுவால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இல்லை.

மாறாக பொதுக்குழுவிற்கு தலைமை குறித்து எந்த முடிவையும் எடுக்கின்ற அதிகாரம் இல்லை என்பது மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அதனால் அதிமுக வழக்கில்  நீதிபதியினுடைய பார்வை தவறு, நீதிபதி தீர்ப்பில் பல முரண்பாடுகள் இருக்கிறது. ஒரு பக்கம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பற்றி நான் எதுவும் கருத்து கூறவில்லை, அது தனி நீதிபதி முடிவு செய்கிறார் என்கிறார்.

இன்றைய தேதியில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று சொல்கிறார். அப்போ ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறார், பொதுக்குழுவினுடைய முடிவுகள் செல்லும் என்பதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறார். இது  இரண்டு முரண்பாடுகளுக்கு உண்டானது, ஆனால்  நீதிமன்றத்தை இபிஎஸ் – ஓபிஎஸ் இரண்டு பேருமே மிகத் தவறாக வழி நடத்தி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |