இன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி பூ சந்தையில் ரோஜா விற்பனை அமோகமாக காணப்பட்டுள்ளது.
இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் தங்களது காதலை வெளிப்படுத்தி வருவர். அந்த வகையில் காதலர் தினம் என்றாலே ரோஜா, சாக்லேட், காதலர் தின சிறப்பு அட்டை உள்ளிட்டவை அதிகம் விற்பனை செய்யப் படுபவை. அந்த வகையில்,
திருச்சியில் உள்ள பிரபலமான காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாக்கள் பெட்டி பெட்டியாக வந்து இறங்கியது. ஒவ்வொரு பெட்டியும் சுமார் 200 ரூபாய் அளவில் நல்ல லாபத்தில் விற்கப்பட்டது. ரோஜாப்பூக்கள் வந்து இறங்கிய சில மணி நேரங்களிலேயே பூக்கள் அனைத்தும் சட்டென்று பெற்றுவிட்டன.
மேலும் திருச்சியின் பிரபல சுற்றுலாத் தலங்களான மலைக்கோட்டை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் காதலர்கள் அதிகம் இன்று வலம் வருவதால் அவர்கள் அத்துமீறுவதை தவிர்ப்பதற்காக காவல்துறையினரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.