Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீடு திரும்பி கொண்டிருந்த பெண்”… வழியில் நேர்ந்த சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மனைவி வள்ளியம்மாள். இவர் 20 வருடங்களுக்கு முன்பாக தனது கணவரை விட்டு பிரிந்து அதே கிராமத்தில் தனது இளைய மகனுடன் வசித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் ஓட்டிக் கொண்டு வந்து பட்டியில் அடைத்துவிட்டு தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின் இரவு 10:30 மணி வரை அங்கே பேசிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் சாலையோரமாக நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வள்ளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்ற பொழுது அவரின் குடும்பத்தினர் கொலையாளியை கைது செய்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். பின் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் காலை 11.30 மணியளவில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |