Categories
தேசிய செய்திகள்

“இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது”உத்தரவு ரத்து… உயர் நீதிமன்ற கிளை அதிரடி…!!!!!

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் மதுரை சூர்யா நகரை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான இல்லத்தில் குடியிருந்து வருகின்றேன். இந்த சூழலில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் அவர்களது குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து கொண்டு எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் இணைந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விதிகளின்படி மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் நான் எனது மாமனார் மாமியாரை துன்புறுத்துவதாக மனு செய்து எனக்கு எதிராக உத்தரவு பெற்று இருக்கின்றனர். அந்த உத்தரவில் காவல்துறையின் உதவியுடன் என்னை வீட்டை விட்டு வெளியேறி வீட்டை மீட்டு மாமனார் மாமியார் இடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில் மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலர் பிறப்பித்த உத்தரவு மனு சட்டவிரோதமானது முதியோர் பாதுகாப்பு படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அதனால் இந்த உத்தரவைத்தரவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நீதிபதி மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007 விதியின் படி மூத்த குடிமகனான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியாகவோ உறவு வாரிசு கிடையாது. அதனால் இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது என கூறி மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

Categories

Tech |