பிரபல இந்தி நடிகர் கமால் ஆர். கான் சமூக வலைத்தளத்தில் இந்தி நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு வருகிறார். நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்சனா படத்தில் அறிமுகமானபோது அவரது தோற்றத்தை கேலி செய்து பதிவு வெளியிட்டார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறு பதிவு வெளியிட்டார்.
இந்த நிலையில் கமால் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் திடீரென்று கைது செய்தனர். கமால் கான் பதிவிட்ட அவதூறு கருத்துக்கு எதிராக யுவசேனா அமைப்பு சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.