100 வருடங்களுக்கு பிறகு நடைபெற இருக்கும் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி டவுன் கொசபாளையம் பகுதியில் இருக்கும் அலர்மேலு மங்கை சமதே கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடத்தப்படும். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக மரத்தேர் உலா வந்த பொழுது தீ விபத்தில் சேதம் அடைந்தது. இதனால் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று சில வருடங்களுக்கு முன்பாக முன்பு இருந்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 18 லட்சம் வழங்கப்பட்டது.
மீதமுள்ள தொகையை மக்கள் பங்களிப்புடன் 34 லட்சம் மதிப்பில் தேர் முடிவு செய்யும் பணிகள் நடந்து வந்த நிலையில் முடிந்தது. இதை அடுத்து பூஜை தேரோட்டம் நடைபெற வேண்டும். இதை அடுத்து பிரம்மோற்சவ திருத்தேர் திருவீதி உலா நடைபெறும். இவ்விழாவானது வருகின்ற 27ஆம் தேதி புரட்டாசி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு அக்டோபர் 3-ம் தேதி தேரோட்டம் உலா நடைபெற இருக்கின்றது. திருத்தேர் வெள்ளோட்டமானது துறை அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பிறகு தான் நடைபெறும். இதனால் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் பிரம்மோற்சவ விழாவுக்கு முன்பாக நடைபெற வேண்டும் என்று அற நிலைத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.