Categories
தேசிய செய்திகள்

சிம்கார்டு மோசடி…. உங்க ஆதார் கார்டை யாராவது யூஸ் பண்ணிருக்காங்களா?…. இதோ நீங்களே தெரிந்து கொள்ள எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதாரத்துடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே சிம்கார்டு வாங்குவதற்கு ஆதார் மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் நாட்டில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன .

அதனை தடுக்கும் வகையில் அரசு ஆதாருடன் தொலைபேசி எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் எண் மூலம் பெறப்பட்ட போலீசின் காடுகளை கண்டறிவது எப்படி என்பது குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.இந்த மோசடிகளை நீங்கள் அரசு இணையதளத்தில் எளிதாக கண்டறிந்து விடலாம்.

அதற்கு முதலில் https://tafcop.dgtelecom.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.அதில் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்து அடுத்து உங்கள் தொலைபேசி எண்ணுக்கு வரும் OTP பதிவிட்டவுடன் உங்கள் ஆதார் அட்டை என்னுடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களும் அங்கு திரையில் தோன்றும். அதில் நீங்கள் பயன்படுத்தாத அல்லது தெரியாத மொபைல் என் ஏதாவது பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த எண்களை நீங்கள் ரத்து செய்வதற்கான கோரிக்கையை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |