Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆன்லைனில் வேலை தேடியப் பெண்”…. 2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் மீட்பு….!!!!!

இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் இரண்டு லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவர் இணையத்தில் வேலை தேடி வந்த பொழுது வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடி வந்திருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்பிதழில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர் முன்பணமாக சிறிது சிறிதாக 2 லட்சத்து 415 கூகுள் பே மூலம் சம்பந்தப்பட்ட லிங்கிற்கு அனுப்பப்பட்ட வங்கி கணக்கில் அனுப்பி இருக்கின்றார்.

ஆனால் அவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் அவர் கட்டிய முன் பணம் வரவில்லை. இதனால் அஞ்சு இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மஞ்சு அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கி அதிலிருந்து அவருக்கு 2 லட்சத்தை மீட்டு அதற்கான காசோலையை போலீஸ் சூப்பிரண்டு அஞ்சுவிடம் வழங்கினார்.

Categories

Tech |