Categories
டென்னிஸ் விளையாட்டு

ரோட்டர்டாம் ஓபன்: அரையிறுதியில் ரோகன் போபண்ணா ஜோடி!

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டேனிஸ் ஷப்போவலோவ் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நெதர்லாந்தில் இந்த ஆண்டுக்கான ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டேனிஸ் ஷப்போவலோவ் இணை, நெதர்லாந்தின் ஜீன் ரோஜர், ரொமேனியாவின் ஹொரியா டெக்கு இணையுடன் மோதியது.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தி 6-2 என்ற கணக்கில் லாவகமாக வென்ற போபண்ணா இணை, இரண்டாவது செட்டில் 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்றில் சிறப்பாக விளையாடிய போபண்ணா இணை 10-7 என்ற கணக்கில் ஜீன் ரோஜர் இணையை வீழ்த்தியது.

இதன்மூலம், போபண்ணா இணை 6-2, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்த இணை, ஜெர்மனியைச் சேர்ந்த ஜென் ஸ்ட்ரூஃப், பின்லாந்தைச் சேர்ந்த ஹென்ரி கான்டினென் இணையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Categories

Tech |