Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டண குறைப்பு ரத்து?….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இலவச எல்கேஜி திட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளது.  நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகள் சங்களுக்கு மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் இதுவரை 9 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நோய் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினர் நழிவடைந்த குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தரும் நிதியை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகின்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு மாணவருக்கு தமிழக அரசு ஆண்டுக்கு 40,000 ரூபாய் செலவழிக்கின்றது. அதனால் தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தையே தமிழக அரசு வழங்குகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு மேலும் குறைத்து உத்தரவிட்டது”. இதை ஏற்றுக்கொள்ள முடியாத தனியார் பள்ளிகள் முதல்வர் மு க ஸ்டாலினிடம் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் இதில் தலையிட்டு கல்வி கட்டணம் குறைப்பை ரத்து செய்து, நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |