Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ALERT: உங்க போனுக்கு இந்த SMS வந்தா உடனே இத பண்ணுங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது.ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு வங்கிகள் பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து வந்தாலும் சிலர் பண மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஆன்லைன் டெக்னாலஜி பற்றி அறிமுகம் இல்லாத நபர்களை குறி வைக்கின்றனர். வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் கணக்கு மூலமாக நண்பர்கள் போல பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை குறிவைத்து தகவல்களை பெற முயல்வது,குறுஞ்செய்தி மூலமாக லிங்க் அனுப்பி தனிநபரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடன் முயற்சிப்பது என பல வகையான மோசடிகள் குறித்து எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி பிஷிங் என்ற ஹேக்கிங் முறையை பயன்படுத்தி கணக்கு எண்கள், லாகின் ஐடிகள், உள்நுழைவு பரிவர்த்தனை பாஸ்வேர்ட், மொபைல் எண்கள், முகவரிகள், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு எண்கள், பிறந்த தேதிகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலமாக ஏமாற்றப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உங்களுடைய பான் கார்டு எண்ணை வங்கிய கணக்குடன் இணைக்கவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என்ற செய்தி அனுப்பப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது பொய்யான செய்தி என எச்சரிக்கை விடுத்துள்ள வங்கி இது போன்ற எஸ் எம் எஸ் கிடைக்கப்பெற்றால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது .

மோசடி கும்பலால் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தியிடம் பெற்றுள்ள லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.குறுஞ்செய்தி அல்லது இமெயில் மூலமாக அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்யும் போது அத நேரடியாக செல்போன் அல்லது கணினியில் உள்ள வங்கி கணக்கை அணுக ஹேக்கர்களுக்கு உதவியாக இருக்கும்.

எனவே வங்கி மட்டும் தனிப்பட்ட விவரங்களை பகிரும்படி எந்த விதமான மெயில் அல்லது எஸ் எம் எஸ் வந்தாலும் அதற்கு பதில் அளிக்கக்கூடாது. ஒருவேளை அப்படி போலியான குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் உடனடியாக [email protected]என்ற எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |