Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க…. இனி மூட்டைகளில் இது இருக்கும்….. தமிழக அரசு சூப்பர் முடிவு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திரா கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் கியூ ஆர் கோடு அச்சிட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக ரேஷன் அரிசி எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டது என்பதை கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |