பிரித்தானியா முற்றிலும் உடைக்கப்படவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நாட்டில் எரிசக்தியின் விலைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், அந்நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 20% -க்கும் மேல் போகலாம் என்று கோல்டன் சாக்ஸ் மதிப்பிட்டு இருந்தது. மேலும் இதற்கு முன்னதாக, எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம் (Ofgem) பிரித்தானியாவில் எரிசக்திக்கான விலை வரம்பு அக்டோபர் 1 முதல் ஆண்டுக்கு £3,549 ஆக உயரும் என்று அறிவித்துள்ளது. இதனால் பிரித்தானியாவின் எதிர்கால நிலைமை குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தென்கிழக்கு லண்டனின் லூயிஷாமிலுள்ள காவல்துறை நிலையத்திற்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, “தனது நாடு முற்றிலும் உடைக்கப்படவில்லை எனவும், இந்த நாடு ஒரு நம்பமுடியாத எதிர்காலத்தைப் பெற்றுள்ளது மற்றும் அதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது சீனாவை விட துணிகர முதலீட்டை அதிகம் ஈர்க்கும் நாடு எது? பிரித்தானியாவிற்கு மக்கள் ஏன் இங்கு வர விரும்புகிறார்கள்? அது இருக்க வேண்டிய இடம் என்பதால் என அவர் கூறியுள்ளார்.