குழந்தை இல்லாததை தொடர்ந்து குடும்ப தகராறில் மனைவி தற்கொலை
கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவர் ராஜா கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் கௌசல்யா கர்ப்பம் ஆகாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவுசல்யா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா விரக்தியடைந்து டீசலை உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். நீ உடல் முழுதும் பரவியது. வலி தாங்காமல் கவுசல்யா அலறி உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த கௌசல்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் கௌசல்யா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஆனைமலை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.