விழா வீட்டில் பிரியாணி கேட்டு தகராறு செய்தவர் சமாதானம் செய்ய வந்தவரை வெட்டினார்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகாலட்சுமி தம்பதியினரின். இத்தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பிரியாணி விருந்தாக போடப்பட்டது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை தனக்கு பிரியாணி பார்சல் செய்து தர வேண்டுமென மகாலட்சுமியின் உறவினரிடம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் விழாவில் தகராறு செய்த ஏழுமலை இடம் நியாயம் கேட்பதாக கூறி மகாலட்சுமியின் உறவினர் மற்றும் பாஸ்கர் சென்றுள்ளார். நியாயம் கேட்க சென்ற இடத்தில் உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படவே பாஸ்கர் சமாதானம் செய்துள்ளார். அப்பொழுது பாஸ்கரிடம் சமாதானம் செய்ய நீ யார் என கேள்வி கேட்டதால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் பாஸ்கரை கீழே தள்ளி ஏழுமலை மாடு வெட்டும் கத்தியால் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.